
ஊட்டி: ஊட்டியில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் நான்காவது ஆண்டாக இன்று (ஏப்ரல் 25) ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள மாநில பல்கலை துணைவேந்தர்கள் 21 பேர், தனியார் பல்கலை துணைவேந்தர் 25 பேர், மத்திய பல்கலை துணைவேந்தர் மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.