யுனெஸ்கோவில் மீண்டும் இணைகிறது அமெரிக்கா.
பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பினராக சேர்க்க, யுனெஸ்கோ அமைப்பு, 2011ல் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைப்பில் இருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வெளியேறின.
தற்போது, 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பின் முக்கிய நன்கொடையாளராக அமெரிக்கா இருந்து வந்தது. இந்த அமைப்புக்கான நிதியில், 22 சதவீதத்தை அமெரிக்கா வழங்கி வந்தது. இதனால், அமெரிக்காவுக்கு முன்னுரிமை கிடைத்து வந்தது.
அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து அந்த இடத்தை, நம் அண்டை நாடான சீனா பிடித்துக் கொண்டது.
இந்த அமைப்பில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கடந்த, 12 ஆண்டுகளுக்கான நிலுவை உள்பட, 5,100 கோடி ரூபாயை செலுத்தவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
அடுத்த மாதம் நடக்க உள்ள யுனெஸ்கோ கூட்டத்தில், அமெரிக்காவை மீண்டும் சேர்ப்பதற்கான ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.