அடுத்த 3 மணி நேரம் ‘ஹெவி அலர்ட்’.. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31 வரை மழை பெய்யும் என்றும், சென்னை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஜூலை 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

அதன்படி, காலை 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.