அடேங்கப்பா, 27 வருஷம் ஆச்சு… சென்னையில் ஜூன் மழையும், வெதர்மேன் கொடுத்த சர்ப்ரைஸும்!

 

சென்னையில் ஜூன் மாதத்தில் மழைக்கான விடுமுறை என்பது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போட்டுள்ள பதிவு பெரிதும் வரவேற்பு பெற்றிருக்கிறது. அடுத்தகட்ட வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் பதிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

 
சென்னையில் இன்று (ஜூன் 19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 137.6 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 67.4 செ.மீ மழை பெய்துள்ளது. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் மழை

சென்னையில் ஜூன் மழை

 

இதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தலைநகர் சென்னையில் ஜூன் மாதம் மழை பெய்வது அரிதான நிகழ்வாகும். கடைசியாக 27 ஆண்டுகளுக்கு முன்னர் கனமழை பெய்தது. அதாவது, 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகியிருந்தது. ஏனெனில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை என்பது மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தான் மழையை தரும்.

 

மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

​​

வெதர்மேன் போட்ட பதிவு

வெதர்மேன் போட்ட பதிவு

 

சென்னையில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. நடப்பாண்டு மழை கொட்டித் தீர்த்து சென்னையில் ஆச்சரியம் அளித்துள்ளது. நடப்பு ஜூனில் இதுவரை 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

96க்கு பின்னர்

96க்கு பின்னர்

 

1996ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது. அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது கவனிக்கத்தக்கது. 1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.