
புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவனத்தை தொடர்ந்து, 6 முக்கிய நகரங்களுக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து, இண்டிகோ விமான நிறுவனம் தமது விமான சேவைகளை ரத்து செய்திருக்கிறது. மீண்டும் விமான சேவை எப்போது தொடங்கும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தது. ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் நகரங்களுக்கான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந் நிலையில், இண்டிகோவை தொடர்ந்து ஏர் இந்தியாவும், விமான சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீகர், ராஜ்கோட் ஆகிய 6 நகரங்களுக்கு விமான சேவை இல்லை என்று செய்திக் குறிப்பின் மூலம் அறிவித்துள்ளது.
செய்திக்குறிப்பில் மேலம் கூறி இருப்பதாவது;
சமீபகால சூழல்களை கருத்தில் கொண்டும், பாதுகாப்பை முன் வைத்தும், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட்டுக்கான விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் தகவலுக்கு, 011-69329333 / 011-69329999 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது http://airindia.com என்ற எங்கள் இணையத்தில் உள் நுழைந்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.