டெல்லி: இந்தியாவில் காற்று மாசு மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனம் அட்டகாசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது நமது நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் காற்று மாசும் கூட முக்கியமான பிரச்சினையாக மாறிவிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகப் பெரிய தலைவலியாகக் கூறப்படுகிறது.
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதைத் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.
காற்று மாசு: நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலும் கூட நிலைமை ரொம்ப மாறிவிடவில்லை. எல்லா நகரங்களிலும் காற்று மாசு முக்கிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறினால் மூச்சு விடுவதே இப்போதெல்லாம் நுரையீரலுக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது.
அதிலும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்று மாசு குறித்து நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. இதனால் இப்போதெல்லாம் வெளியே செல்வதற்கு முன் காற்றின் தரத்தை சரிபார்ப்பது ரொம்பவே அவசியமாகிறது. அப்போது தான் காற்று மாசுக்கு ஏற்பட நாம் நமது பயணத்தைத் திட்டமிட முடியும். இதில் தான் இப்போது கூகுள் நிறுவனம் உள்ளே வந்துள்ளது. பொதுமக்களுக்கு உதவும் வகையில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கக் கூகுள் நிறுவனம் புதிய வசதியைக் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறது, இது காற்று மாசு அதிகமாக இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூதிவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
காற்றின் தரம்: கூகுளில் டிஸ்கவர் தளத்தில் காற்று மாசு குறித்துத் தெரிந்து கொள்ள உதவும் AQI எனப்படும் காற்று தர மதிப்பீடு குறித்த கார்டை கூகுள் வெளியிடுகிறது. கூகுள் செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இப்போது காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். தற்போது மொபைல்களில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. இருப்பினும், டேப்லெட்டுகள் இந்த வசதி வழங்கப்படவில்லை. அதிலும் காற்றின் தரம் குறித்த இந்த கார்டுகள் ரியல் லைமில் மாறிக் கொண்டே இருக்கும். அதாவது காலையில் ஒரு டேட்டாவை வைத்து கார்டு வருகிறது என்றால்.. மதியம் அதன் காற்றின் தரம் மாறினால் உடனடியாக அதுவும் அப்டேட் ஆகிவிடும்.
இது காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்போருக்கு நிச்சயம் மிகப் பெரியளவில் உதவும்.. 5ஜி இருந்தும் என்ன பயன்.. மொபைல் நெட் மெதுவாக இருக்கா.. இதை செய்யுங்க ஜெட் வேகத்தில் பாயும்5ஜி இருந்தும் என்ன பயன்.. மொபைல் நெட் மெதுவாக இருக்கா.. இதை செய்யுங்க ஜெட் வேகத்தில் பாயும் மினி கார்டு: கூகுளின் டிஸ்கவர் டேப்பில் தற்போது மூன்று மினி கார்டுகள்- அதாவது விளையாட்டு, வானிலை மற்றும் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு மினி கார்டுகள் உள்ளன.. விளையாட்டு தொடர்பான கார்டில் உங்களுக்குப் பிடித்த அணியின் ஸ்கோர் அப்டேட் ஆகும். அடுத்து வானிலை தற்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கான வானிலை தரவுகள் அப்டேட் ஆகும்.
அதேபோல பைனான்ஸ் கார்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கு விலைகள் மற்றும் சந்தைப் போக்கு தெரியும். இதில் தான் கூகுள் இப்போது நான்காவது மினி கார்டை டிஸ்கவர் டேப்பில் சேர்க்கவுள்ளது. அதில் தான் ஏர் குவாலிட்டி குறித்த தகவல்கள் இருக்கும்.
இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதியின் காற்றின் தரம் குறித்து நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும். வெளியே செல்வதற்கு முன்பு, பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட நிச்சயம் இது உதவும் என்றே கூறப்படுகிறது. விரிவான தகவல்: இதில் ஆண்டிராய்டு சாதனத்தில் வரும் ஏர் குவாலிட்டி தகவல்களைக் காட்டிலும் ஆப்பிள் சாதனங்களில் வரும் தரவுகள் விரிவானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் காற்றின் தரம் குறித்த மினி கார்டில் அடுத்த சில மணி நேரத்திற்குக் காற்றின் தரம் எப்படி மாறும் என்பது குறித்த தகவலும் இருக்கும். மேலும், காற்றின் தரம் மாறினால் அதற்கேற்ப நிறமும் மாறுமாம்.
விரைவில் இந்த வசதி படிப்படியாக அனைத்து சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.