
புதிய விலாசத்தில் பாங்க் ஆஃப் இந்தியா கரூர் கிளை புதிய கட்டிட திறப்பு விழா 27-11-2023 அன்று வடக்கு பிரதக்ஷண சாலையில் பேங்க் ஆஃப் இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் திரு வி தங்கவேல் ஐஏஎஸ் அவர்கள் முன்னிலை வகிக்க கோவை மண்டல மேலாளர் திரு அஜய்குமார் தாக்கூர் மற்றும் கிளை மேலாளர் திரு தனசேகரன் மற்றும் வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் சிறுமி லயா உள்ளிட்டோர் நிகழ்த்திய பரதநாட்டிய நிகழ்ச்சி, இதற்கு மேலும் சிறப்பை சேர்த்தது இதில் கலந்துகொண்ட சிறுமி லயா உள்ளிட்டோருக்கு திரு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.