சென்னை : கடந்த 2015ல், ஓராண்டு பி.எட்., எம்.எட்.,படிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

நாட்டில், பி.எட்., – எம்.எட்., படிப்புகளை முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவற்றின் தரம் குறைந்ததாலும், 2015ம் ஆண்டுக்கு பிறகு, அப்படிப்புகள் நிறுத்தப்பட்டன.

அவற்றுக்க பதிலாக, ஈராண்டு படிப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மீண்டும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படிப்புகளை அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான என்.சி.டி.இ., திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வரும் கல்வியாண்டு முதல், இப்படிப்பு அறிமுகமாக உள்ளது.

இதில், நான்காண்டு பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்பை முடித்தோர், ஓராண்டு, பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், முழுநேரமாக எம்.எட்., படிக்க விரும்புவோர் ஒராண்டு படிப்பில் சேரலாம்.

அதேநேரம், புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர்கள், மூன்றாண்டு பட்டப்படிப்பை மட்டுமே முடித்துள்ளனர்.

அதனால், அவர்கள் வழக்கம் போல, இரண்டாண்டு பி.எட்., படிப்பில் மட்டுமே சேர முடியும்