பாதிரிவேடு மாதர்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1983 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களின் நட்பு இணைப்பு விழா.
40 ஆண்டு அற்புத சந்திப்பு விழா: பாதிரிவேடு மாதர்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1983 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களின் நட்பு இணைப்பு விழா கடந்த செப்டம்பர் 3 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அப்பொழுது பணிபுரிந்த ஆசிரியர்களுடன் கலந்து கொண்டு தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு விழாவின் போது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியும் பரிசுப் பொருட்கள் வழங்கியும் கௌரவப்படுத்தினார்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் மேடையில் உணர்வுபூர்வமாக மற்றும் கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர். நண்பர்களுக்கும் நினைவு பரிசுகளும், புகைப்படத்துடன் கூடிய விலாசம் மற்றும் கைபேசி எண்கள் அடங்கிய கோப்புகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பு விழா தங்கள் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத பொக்கிஷம் என்று நண்பர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நினைவு ஆடைகளை அணிந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.விழா முடிந்ததும் அனைவரும் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.