இந்தியாவின் அதிக மதிப்புள்ள டாப் 50 பிராண்டுகள்: எது முதலிடம் தெரியுமா?

2023-ம் ஆண்டின் இந்தியாவின் அதிக மதிப்புள்ள டாப் 50 பிராண்டுகளின் மொத்த மதிப்பு ரூ.8.31 டிரில்லியன் என்ற ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த டாப் 50 பிராண்டுகளில் TCS முதல் இடத்தை பிடித்துள்ளது.

இன்டர்பிராண்ட்(Interbrand) என்ற பிராண்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி,

  • அதிக மதிப்புள்ள டாப் 50 பிராண்டுகளில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS), ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் இன்ஃபோசிஸ் (Infosys) ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

  • இந்தியாவின் அதிக மதிப்புள்ள டாப் 50 பிராண்டுகளின் மொத்த மதிப்பு 100 பில்லியன் டாலரை தாண்டுவது இதுவே முதல்முறை ஆகும்.

  • இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் பத்து பிராண்டுகளின் மொத்த மதிப்பில் முதல் மூன்று பிராண்டுகளுடைய மதிப்பு மட்டும் 46 சதவீதம் ஆகும்.

அதிக மதிப்புள்ள டாப் 10 பிராண்டுகள்! மகிழ்ச்சியில் 20,000 திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்… காரணம் இதுதான்..!

  • டாப் 50 பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 40 சதவீதத்தை முதல் 5 பிராண்டுகளே பங்களிக்கின்றன.
  • டாப் 50 பிராண்டுகளில் முதல் 10 பிராண்டுகளின் மொத்த மதிப்பு, மீதமுள்ள 40 பிராண்டுகளின் மொத்த மதிப்பை விட அதிகமாகும். டாப் 10 பிராண்டுகளின் மொத்த மதிப்பு ரூ.4.94 மில்லியன் என்பதும், மீதமுள்ள 40 பிராண்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.36 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பத்துறை இந்த பட்டியலில் அதிக பங்களிக்கும் துறையாக மாறி உள்ளது. இதற்கு முன்பு இந்த இடத்தில் பலதரப்பட்ட தொழிற்துறை (diversified industries) தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த பத்தாண்டுகளில் இந்த பட்டியலின் டாப் 5 இடங்களில் மூன்று தொழில்நுட்ப பிராண்டுகள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில் ஜே.எஸ். டபிள்யூ (JSW 323%), ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints 293%), தனிஷ்க் (Tanishq 285%), கோட்டக் (Kotak 260%), ஹெச்.டி.எஃப்.சி ( HDFC224%), அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises,210%), ஹெச்.சி.எல் HCL(210%), இன்ஃபோசிஸ்(Infosys-197%), மாருதி சூசுகி (Maruti Suzuki-184%), ஆக்சிஸ் வங்கி (Axis Bank-160%) ஆகிய நிறுவனங்கள் மிக வேகமாக வளரும் பிராண்டுகளின் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது.