மாநகராட்சியில் அதிகாரம் செலுத்தும் அமைச்சர்கள்: மேயரின் முக்கியத்துவம் பறிக்கப்பட்டதாக புகார்.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதல் ஒப்பந்தப் பணி வரை, அனைத்திலும் மூத்த அமைச்சர்கள் தலையிடுவதால், மேயர் பிரியாவின் தனித்துவம் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகளையும் அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், 101 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் செயல்படாததால் அவர்களின் தந்தை, கணவர், சகோதரர், மகன் என, யாரேனும் ஒருவர் தான், ‘நிழல்’ கவுன்சிலராக இருந்து அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.
 
பல பணிகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலரை செயல்பட விடாமல், குடும்ப ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பிரியாவை, மேயராக தி.மு.க., தலைமை அறிவித்தது.
 
அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதால், ஆரம்பத்தில் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன்

செயல்பட்டு வந்தார். ஆனால், மேயராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், தொடர்ந்து அமைச்சர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வந்தார். ஆனால், மேயராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், தொடர்ந்து அமைச்சர்களின் வழிகாட்டுதல்படியே செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
 
அத்துடன், தி.மு.க., தலைமையிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், நேரடியாகவே மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துவதாக, அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அமைச்சர்களில் சிலர், அதிகாரிகளை ஒருமையில் பேசி அவமதிப்பதால் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.