வெப்ப அலை தாக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: ‘தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று வெப்பநிலை உயர்வதுடன் வெப்ப அலையும் தாக்கும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று காலை நிலவரப் படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக திருப்பத்துார் மாவட்டம் வடபுதுப்பட்டில் 11 செ.மீ., மழை பெய்தது. மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்ஷியஸ் அதாவது 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
 
கடலுார், மதுரை, திருத்தணி, துாத்துக்குடி, வேலுார், 40; நாகை, கரூர், பரமத்தி, தஞ்சாவூர், திருப்பத்துார், திருச்சியில் 39; காரைக்கால், தர்மபுரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரியில் 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. தமிழகம், புதுச்சேரியில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
 
தமிழகத்தின் கடலோரம் அல்லாத உள் பகுதிகளில் வெப்ப அலை நிலவும். ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும். அதிகபட்சம் 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். சென்னை உள்பட மாநிலத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
 
அரபி கடலில் சுழலும் ‘பைபோர்ஜாய்’ மிக தீவிர புயல். குஜராத்துக்கு தென் மேற்கில் 830 கி.மீ., தொலைவில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் குஜராத் அருகே சென்று வலுவிழக்க வாய்ப்புள்ளத. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.