மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 82 வயதிலும் படித்து வருகிறார் முதியவர் ஒருவர். இப்போது அவர் வாங்க போகும் பட்டம் 25-வது பட்டம் ஆகும்.. பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி. என 24 பட்டம் முடித்துள்ள அவர், இப்போது 25வது பட்டத்திற்கான பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

       படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பல்வேறு வரலாறுகளையும், கதைகளையும் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த காலத்தில் கல்வி கற்பதற்காக பலர் எவ்வளவு போராட்டம் நடத்தினார்கள் என்பதையும் நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.. வயதான காலத்திலும் கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கிறார் 82 வயது முதியவர். இதுவரை 24 பட்டம் பெற்றுள்ள அவரை பற்றி பார்ப்போம்.

         மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது வயது 82. இவர் பாலிடெக்னிக்கில் டீச்சராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். குருமூர்த்திக்கு கல்வியின் மீது தீவிர ஈடுபாடு இருந்தது இதன் காரணமாக, 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்திருக்கிறார்.

          இதுவரை ஆசிரியர் குருமூர்த்தி பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளை முடித்த குருமூர்த்தி, பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்திருக்கிறார் குருமூர்த்தி. ஆசிரியர் குருமூர்த்தி கல்வி கற்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார். 24 பட்டங்களை முடித்த குருமூர்த்திக்கு 82 வயதில் இன்னொரு ஆசை வந்தது. அதுதான் 25 வது பட்டப்படிப்பு. 25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை தேர்வு செய்துள்ளார்.