எங்களுக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும், இருக்கும் எங்கள் அத்திம்பேர் (எ) ஆர். கிருஷ்ணன் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

எங்களுக்கு நல்ல எண்ணங்களையும் எதிர்கால இளைஞர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற நல்ல சிந்தனையும் வரக் காரணமான இருந்தவர் எங்கள் சிறு வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள், கதை ,கட்டுரை, கவிதை ,கணினி அறிவியல் போன்ற புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் பழக்கங்களை எங்களுக்கு உருவாக்கினார்.

எங்களை பத்திரிகை துறையில் களம் இறங்கச் செய்ததும் இவரே .இவர் தனது வாழ்நாள் முழுவதும் எங்கள் எதிர்கால வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர். இவரிடம் நாங்கள் கற்றுக் கொண்ட அமைதியான குணம், ஆழ்ந்த சிந்தனை, அதிர்வரியா பேச்சு போன்றவை எங்களை மேலும் நல்வழிப்படுத்தி எங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது இவர் மறையவில்லை. எங்கள் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் செய்கைகளிலும் இருக்கிறார் என்று கட்டுரை இவருக்கு சமர்ப்பிக்கிறோம்.

வைபவ் ஆசிரியர் ஆர். சுப்பிரமணியன்