சென்னை: ரேஷன் கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள், பிரச்சனைகள் தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 18.11.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

முகாம்கள் தொடக்கம் : மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி அறிவிப்பு; இது போக தீபாவளியை முன்னிட்டு 2.64 இலட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருள்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் 36,578 நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.

சக்கரபாணி தகவல் வெளியிட்டு உள்ளார். உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி 07.11.2023 சென்னை இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1 கிலோ வெங்காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்படுவதை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார்கள்.

அமுதம் மக்கள் அங்காடி மூலம் சென்னையில் 10 அங்காடிகளில் வெங்காயம் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை அங்காடிகளுக்கு 2.28,191 மெ.டன் அரிசி, 19,170 மெ.டன் சர்க்கரை, 5.321 மெ.டன் கோதுமை. 10.972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12 இலட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருள்கள் இரண்டு நாள்களில் அனுப்பி முடித்து வைக்கப்படும். குவியும் அரிசி, பருப்பு..

தீபாவளிக்காக ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு.. மக்கள் ஏக குஷி.. என்ன நடந்தது? பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு.

பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல தரத்துடன் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.