TNPSC அடிச்ச அப்பாயின்மென்ட் ஆர்டர்… 2 நாட்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு மெகா ஏற்பாடு!

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிதாக இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்களை நிரப்பும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போருக்கு தமிழகத்தில் அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பணியிடங்கள் குறித்து உரிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி கலந்தாய்வு மூலம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவர்.

 

இளநிலை உதவியாளர் பணி – குரூப் 4 தேர்வு

இளநிலை உதவியாளர் பணி - குரூப் 4 தேர்வு

 

அந்த வகையில் இளநிலை உதவியாளர் பணிக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு 673 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பிரத்யேக பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களை பணிநாடுநர்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிடுகிறது. இவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று அறிவிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.